Saturday, September 15, 2007

சாப்பாடு எங்க விக்கும்

வடிவேலு : இந்த ஊர்ல சாப்பாடு எங்க விக்கும்.
பார்த்திபன்: எல்லா ஊர்லயும் சாப்பாடு தொண்டையிலதான் விக்கும்।
-----------------------------------------------------------------------
வடிவேலு : இந்த செல்போன்ல எந்த கார்ட போட்டாலும் பேசலாம்। பார்த்திபன்: அப்படியா...
வடிவேலு : ஆமாய்யா... ஆமா...
பார்த்திபன்: அப்படின்னா இந்த ரேஷன் கார்ட போடு பேசு...
வடிவேலு : கிளம்பிட்டாங்கையா... கிளம்பிட்டாங்க...
----------------------------------------------------------------------
பார்த்திபன் : பழம் என்ன விலை.
வடிவேலு : ஒரு பழம் ஒரு ரூபா...
பார்த்திபன் : 60 பைசாவுக்கு வராதா...
வடிவேலு : 60 பைசாவுக்கு தோல்தான் வரும்...
பார்த்திபன் : இந்தா 40 பைசா... தோலை வச்சுக்கிட்டு பழத்தை கொடு வடிவேல் : ????????????
----------------------------------------------------------------------
வடிவேலு: சட்டை நல்லா இருக்கே... தீபாவளிக்கு எடுத்ததா...
பார்த்தீபன்: இல்ல... எனக்கு எடுத்தது.

No comments: