Saturday, September 15, 2007
கிளியின் வேண்டுதல்
ஒரு பெண்ணுக்கு கிளி வளர்க்க ஆசை வந்தது. கடைத்தெருவுக்கு போனாள். கடையில் ஒரே ஒரு கிளி மட்டுமே இருந்தது. கடைக்காரரிடம் கிளி என்ன விலை என்று கேட்டாள். ''இந்த கிளி வீட்டில் வளர்க்க முடியாது. வேறு கிளி வந்ததும் தருகிறேன்'' என்று அவர் சொன்னார். ''ஏன் வளர்க்க முடியாது" ''கிளி கெட்ட வார்த்தை பேசும். இது வேண்டாம்.'' ''இவ்வளவுதானா.. பிரச்சனையை விடுங்கள். நான் தினமும் நல்ல வார்த்தைகளை சொல்லிக் கொடுத்து அதை திருத்தி விடுகிறேன்" என்று சொன்னார். வேறு வழி இல்லாமல் கடைக்காரர் கிளியை கொடுத்து அனுப்பினார். வீட்டுக்கு வந்ததும், அவ்வப்போது கிளி கெட்ட கெட்ட வார்த்தையால் பேசியது. எவ்வளவோ சொல்லிக் கொடுத்தும் கிளி கெட்ட வார்த்தை பேசுவதை நிறுத்த வில்லை. அந்த பெண்மணிக்கு அசிங்கமாகிப் போனது. உறவினர்கள், நண்பர்கள் வரும்போதும் கிளி கெட்ட வார்த்தை பேசவே, அவமானமாகிவிட்டது. உடன் தனக்கு வேண்டப்பட்ட பாதிரியாரிடம் சென்று ஆலோசனை கேட்க நினைத்தார். பாதிரியாரிடம் சென்று தனது கவலையைத் தெரிவித்தார். ''பூ.. இவ்வளவுதானே.. கவலையை விடுங்கள். நான் ஒரு ஆண் கிளி வளர்க்கிறேன். அந்த கிளிக்கு தினமும் பைபிளில் இருந்த வாசகங்களை கற்றுக் கொடுத்துள்ளேன். உங்கள் கிளையை என்னிடம் கொண்டு வந்து கொடுங்கள். என் கிளியுடன் கொஞ்சம் நாள் தங்க வைத்தால் போதும் உங்கள் கிளி திருந்தி விடும்" என்றார். அந்த பெண்மணிக்கு சதோஷமாகிவிட்டது. உடனடியாக வீட்டுக்குச் சென்று தனது கிளியை கொண்டு வந்தார். உடன் அந்த கிளையை பாதிரியார் தனது கிளியின் கூண்டுக்குள் அனுப்பி வைத்தார். அந்த ஆண் கிளி சொன்னது. ''கடைசியாக என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிய இறைவா உனக்கு நன்றி" என்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment