குடியானவன் ஒருவன் மார்க்கெட்டுக்குச் சென்றான். தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு, பசு மாடு ஒன்றையும் கன்றையும் விலைக்கு வாங்கினான். மாலையாகிவிட்டது. தனது பொருட்களுடன் காட்டு வழியை கடந்து செல்லவேண்டும். சற்று பயம்தான். ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சென்றான்.
அவன் நினைத்தப்படியே திருடர்கள் சுற்றிச் சூழ்ந்தார்கள். அவனிடம் இருந்து பொருட்களையும், பசுவையும் பறித்துக் கொண்டனர். பின்னர் அவனது ஆடைகளை அனைத்தையும், களைந்து அவனை நிர்வாணமாக மரத்தில் கட்டி வைத்தனர். கன்றை மட்டும் அப்படியே விட்டு விட்டு போய்விட்டனர்.
மறுநாள் காலையில் அந்த வழியாக வந்தவர்கள், குடியானவனை பார்த்து அவனை காப்பாற்றினார்கள். அவர்கள் கயிற்றை அவிழ்த்து விட்டதும், அவசர அவசரமாக கன்று குட்டியை போட்டு அடித்து உதைத்தான். அவனை காப்பாற்றியவர்கள் எதுவும் புரியாமல் முழித்தார்கள்.
Saturday, September 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment